கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா இன்று (ஜூலை 5) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், '1979 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு எண் 603 ஒன்றில் நீதிபதி சந்திர சூட் தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில், 55வது வரியில் சொல்லப்பட்டது என்னவென்றால் ஆளுநருக்கு இணையான நிர்வாகியாகக் கூட முதலமைச்சர் இருக்க முடியாது என்று அரசியலமைப்பு சட்டம் சொல்வதாகவும், ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி அதிகாரம் படைத்தவர் முதலமைச்சர் அல்ல, ஆளுநர் தான் எனவும் அதில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் ஆளுநர் ஒருவரைப் பார்த்து சந்தோஷப்பட்டால் அவர் மந்திரியாக இருக்கலாம் இல்லை என்றால் அவர் மந்திரி இல்லை; எந்திரி என்று அரசியலமைப்பு சட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தீர்ப்பு சொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் தலைமை நிர்வாகி அல்ல என்றும், அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சட்டம் தெளிவுபடுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, ஆளுநரை விமர்சிக்கும் முட்டாள்கள் இந்த தீர்ப்பைப் படிக்க வேண்டும் எனவும் என்றார். இவ்வாறு முட்டாள் என்று நான் சொல்லவில்லை என்றும் ஈ.வெ.ராமசாமியே முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும் ஹெச்.ராஜா கூறினார். இந்த நிலையில் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது ED வழக்குகள் உள்ளதாகவும், ஒவ்வொருவராக அனுப்பலாம் இல்லையென்றால் மொத்தமாக அனைவரையும் அனுப்பலாம் என்றார்.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என்பது எனது சொந்த அபிப்பிராயம் எனத்தெரிவித்த அவர், அரசியில் சாசன படி ஆளுநர் சரியாகத் தான் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பீகாரியைக் முட்டாள் என்று சொன்னால் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு வரக்கூடாது என்று அம்மக்கள் கூறினாலும், அதையெல்லாம் தாண்டி வெட்கமே இல்லாமல் பீகாருக்கு ஸ்டாலின் சென்றுவந்தார் என்று கடுமையாகச் சாடினார். அதேபோல், அந்த பீகார் கூட்டத்தில் ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார் என்று பிரஷாந்த் கிஷோர் சொல்லியிருப்பதாகவும், இது கண்டிடத்தக்கது. இது தொடர்பாக, ஒரு மாநிலத்தையே பிரஷாந்த் கிஷோர் இழிவு செய்துள்ளதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
மக்களுக்காகப் பேசுவது போல, விபரம் தெரியாமல் பேசும் தீய சக்திகளையும்; ஆளுநர் பற்றி ஏதும் தெரியாமல் விவாதம் செய்யும் சில யூடியூபர்கள் பேசுவதையும் மு.க.ஸ்டாலின் நம்பக்கூடாது எனக் கூறிய ஹெச்.ராஜா ஸ்டாலின் அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றார். இல்லையெனில், அவர்களே உங்களைக் கொம்பு சீவி விட்டு உங்களையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று சாடினார். இருப்பினும், ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர்; அவரின் நலனில் எனக்கு அக்கறை உள்ளது, அவர் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அமைச்சர் சேகர்பாபு ஆள்கடத்தல் பாபு எனக்குற்றச்சாட்டிய அவர், அவரது மகளையும், மகளின் கணவரையும் 60 நாட்களாகக் கடத்தி வைத்திருந்ததாகக் கூறினார்.
இந்த விவாகரத்தில் அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்தி வருவதாகவும், இந்த விஷயத்தில் அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும், அனைவரையும் சட்டத்தின் முன் நிற்க வைக்க முடியும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ஹெச்.ராஜா, 'கோயில் விஷயத்தில் சேகர்பாபு விளையாடக்கூடாது என எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, சிதம்பரம் கோயிலை (Chidambaram Nataraja Temple) கட்டியது தீட்சிதர்கள் தான். எனவே, கோயிலைக் கட்டியது மன்னர்கள் என்று ஈ.வெ.ராமசாமியைப் பின்பற்றும் முட்டாள்கள் சொல்வதாகக் குற்றம்சாட்டிய ஹெச்.ராஜா, இந்து மதத்தை மொட்டையடிக்க இந்த இந்து விரோத அரசு செயல்படுவதாகவும் கடுமையாகச் சாடினார். அதோடு, கோயில் விஷயத்தில் சேகர்பாபு விளையாடக்கூடாது என்றும் கோயில் சொத்தைக் தொட்டல் குடி அழியும். இதுவே சேகர்பாபுவுக்கு இறுதி எச்சரிக்கை எனவும் சிதம்பரம் நடராஜரை தொட்டால் அவ்வளது தான் எனவும் அவர் எச்சரித்தார்.
பாஜக தனது ஆயுதங்களைக் கையிலெடுக்கும்: அமைச்சர் சேகர்பாபுவின் சிவனிடம் விளையாட வேண்டாம் என்றும் நடராஜரை அழிக்க நினைத்தால் அது நடக்காது எனத் தெரிவித்த ஹெச்.ராஜா, எந்த கட்ட பஞ்சாயத்தும் செய்தும், ஆள்கடத்தல் செய்தும் எந்த அறிவுமில்லாமல் பேசும் அறநிலையத்துறை அமைச்சரை போல் நானில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கோயில் மாடுகளை எல்லாம் கேரளாவுக்கு இறைச்சிக்காக வெட்டுக்கு அனுப்புவதாகத் தகவல் வருவதாகவும் தெரிவித்த அவர், இந்து கோயில்களைத் தொட்டால் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: Thulukkarpatti Excavation:ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு.. புதையல்களை அள்ளித்தரும் துலுக்கர்பட்டி!