குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவந்த சட்டம், தேச நலனில் அக்கறை கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை. ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்களும் இதற்காகப் போராடிவருவது வேடிக்கையாக உள்ளது.
எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை இந்தச் சட்டம் தடுக்கும். திமுக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை, சாலை சீரமைப்பு வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!