ETV Bharat / state

கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ATM Attempted robbery

கோவை அருகேயுள்ள வெள்ளலூரில் கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

attempted-robbery-by-breaking-an-atm-machine-near-coimbatore
கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
author img

By

Published : Sep 19, 2021, 4:49 PM IST

கோவை: கோவை வெள்ளலூர் சித்தி விநாயகர் கோயில் அருகில் கனரா வங்கியும், அத்துடன் வங்கியின் ஏடிஎம் இயந்திரமும் செயல்பட்டுவருகிறது. இன்று (செப் .19) அதிகாலையில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

ஏடிஎம் அலாரம் ஒலித்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். ஆனால், மக்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Attempted robbery by breaking an ATM machine near Coimbatore
ஏடிஎம் மையத்திற்குள் மிளகாய் பொடியை தூவிய கொள்ளையர்கள்

கோவை காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட், போத்தனுர் காவலர்கள் கொள்ளை முயற்சி நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்தும், மையத்திற்குள் மிளகாய்ப்பொடி தூவியும் சென்றது தெரியவந்துள்ளது.

கொள்ளை முயற்சி நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தற்போது காவலர்கள் ஆய்வு செய்து, கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.