திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த விக்னேஸ் (27), கண்ணன் (25) ஆகிய இருவரும் 2016ஆம் நெகமம் காளியப்பம்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தனர்.
இது குறித்து நெகமம் காவல் துறையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுமியை தேடிக் கண்டுபிடித்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த விக்னேஸ், கண்ணன் ஆகிய இருவரில் விக்னேஷ் என்பவர் நேற்று முன்தினம் தாராபுரம் அருகில் உள்ள வீராட்சிமங்கலம் என்ற இடத்தில் இருப்பதாக நெகமம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விக்னேஸை கைது செய்தனர். மேலும் விக்னேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கண்ணனை கோவை கருமத்தம்பட்டி அருகே காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.