ETV Bharat / state

இரும்பு கோட்டையாகத் திகழும் கொங்கு... கெத்து காட்டிய அதிமுக! - admk power in covau

கோவையில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி, கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

admk
அதிமுக
author img

By

Published : May 3, 2021, 3:40 PM IST

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே கொங்கு மண்டலம், அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் அதிமுகவின் கொடியே பறந்து வருகிறது. தற்போது நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும், அதையே பிரதிபலிக்கிறது. கடந்த, 2016 தேர்தலில் பத்தில் ஒன்பது தொகுதிகளை ஜெயித்த அதிமுக, இம்முறை 10 தொகுதிகளையும் தன் வசம் ஆக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவும் , ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவும் போட்டியிட்டது. . போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

admk
கோவையில் கெத் காட்டிய அதிமுக

நட்சத்திர தொகுதியாக திகழ்ந்த கோவை தெற்கில், காலை முதலே வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன்,ம.நீ.ம வேட்பாளர் கமலஹாசன் என முக்கிய வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை வந்தனர். இறுதியாக, 25,26 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது வானதி சீனிவாசனும், கமலஹாசனும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அருகருகே அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாகக் கவனித்தனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

sp velumani
அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி

இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக ,வானதி சீனிவாசன் 53209 வாக்குகளும்,ம நீ ம தலைவர் கமலஹாசன் 51481 வாக்குகளும்,காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 42383 வாக்குகளும் பெற்று இருந்தனர்.

kamal
ஜொலிக்க தவறிய கமலின் டார்ச்

அதே போல, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக கார்த்திகேய சிவசேனாபதி 81829 வாக்குகளும்,அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி 123538 வாக்குகளும் பெற்றனர். 1704 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தனது வெற்றியை பதிவு செய்தார்.

covai
பரபரப்பிலிருந்த கோவை தெற்கு

கோவை வடக்கில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனனும், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண்குமாரும், மேட்டுப்பாளையம் தொகுதியில் செல்வராஜும், வால்பாறை தொகுதியில் அமுல் கந்தசாமியும், பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமனும், சிங்காநல்லூர் தொகுதியில் ஜெயராமனும் , கிணத்துகடவு தொகுதியில் தாமோதரனும் வெற்றி பெற்றனர்.

vanathi
வெற்றி மகிழ்ச்சியில் வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.