ETV Bharat / state

‘இந்தியப் பிரதமராக ஒரு தமிழர் ஆள வேண்டும்’ - கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி!

author img

By

Published : Jul 24, 2023, 10:00 PM IST

கோவையில் மணிப்பூர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து நடந்த நிகழ்வில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று ஒரு தமிழர் பிரதமராக இந்தியாவை ஆள வேண்டும்” என கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கூறியுள்ளார்.

manipur-riots-dmk-womens-team-protest-demonstration-in-coimbatore
மணிப்பூர் கலவரம்- கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் : மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணி சார்பாக போரட்டம் நடைபெற்றுவருகிறது.அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட திமுக கவுன்சிலர்கள், திமுக மகளிர் அணியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து கூட்டதில் கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், “ஆட்சி செய்ய தகுதியில்லாத மோடி அரசு பதவி விலக வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வென்றது என்று கேள்வி படவே கூடாது” என்றார். தொடர்ந்து, வானதி சீனிவாசன் குறித்து பேசிய அவர், “எங்கள் வீட்டு ஆண்களை நாங்கள் தான் அனுப்பி வைக்கிரோம், ஒவ்வொரு வீட்டிலயும் இருக்குற பிரச்னைய நீங்க போய் பார்த்து சீர்படுத்தி கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்குறதே நாங்தான்” என கூறினார்.

முன்னதாக கடந்த மாதம் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், “திமுக கவுன்சிலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால், அவர் ஒரு வீட்டில் இருக்க மாட்டார், திமுகவினர் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், திமுகவின் ஜீன் அது” என பேசியிருந்தார்.

குஷ்பு குறித்து பேசிய அவர், "உங்கள் செருப்பு எங்கே சென்றது, முடிந்தால் மணிப்பூரில் வன்கொடுமையை செய்தவர்களை செருப்பைக் கொண்டு அடியுங்கள், நீங்களும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரு தாய் நீங்கள் பாஜக கட்சியில் இணைந்து விட்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்” என தெரிவித்தார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து பேசிய இலக்குமி இளஞ்செல்வி, “எப்பொழுது அவர்களிடம் செங்கோலை வழங்கினார்களோ இந்தியாவே நாசமாக போய்விட்டது. செங்கோலை கையில் வாங்கியதிலிருந்து எங்கு பார்த்தாலும் இது போன்ற கொடுமைகள், உயிரிழப்புகள், ரயில் விபத்துக்கள், மிகப்பெரிய மழை சேதங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த செங்கோல் உங்களுக்கானது அல்ல, அந்த செங்கோலை வைத்து தலைமை தாங்கி நடத்தக்கூடியவர் தமிழராக தான் இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று ஒரு தமிழர் பிரதமராக இந்தியாவை ஆள வேண்டும் என நாம் சூழுரை ஏற்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் தொடர் அமளி! ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.