ETV Bharat / state

பொங்கல் விழாவில் சோகம்! தேனீ கொட்டியதில் 34 பேர் படுகாயம்! - Pollachi Government Hospital

Honey bee attack: பொள்ளாச்சி அருகே பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்த போது தேனீக்கள் கொட்டியதில் 4 குழந்தைகள் உட்பட 34 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனீ கொட்டியதில் 34 பேர் மருத்துவமனையில் அனுமதி.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:28 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஒன்றுகூடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்த போது தேனீக்கள் கொட்டியதில் 4 குழந்தைகள் உட்பட 34 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை 1ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது உறவினர்களுடன் பொங்கலிட்டு மறைந்த தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்வது வழக்கம்.

அந்த நிலையில் இன்று தை திருநாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் ஒன்றுகூடி பொங்கல் வைத்துள்ளனர். அப்போது இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயின் புகை அங்கு மரக்கிளையில் இருந்த தேனீ கூட்டில் பரவிய நிலையில் தேனீக்கள் கலைந்து அங்கு இருந்துவர்களை கொட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நான்கு குழந்தைகள் உட்பட 34 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் தேனீ கொட்டி பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முன்னிலையில் இருந்த வீரர்கள் படுகாயம்..! ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.