கோவை: திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, பொள்ளாச்சி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கன்பாளையத்தில் திமுகவினர் மக்கள் சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தமுயன்றதற்காக திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், கன்னிமுத்து உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கையின்போது, அதிமுக அரசிற்கு எதிராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: தமிழ்நாடு மக்கள் ஆட்சிமாற்றத்தை உருவாக்கப் போகிறார்கள் - மு.க.ஸ்டாலின்