உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (62). இவர் தனது மனைவி பேபிகமலம் (55), கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மனைவி மற்றும் அவரது தங்கை ஜோதிமணி உடன் சம்பத்குமார், உடுமலைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் நேருக்குநேர் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வேலுச்சாமி, சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி பேபி கமலம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தத்தைக் கேட்டு வந்த வாகன ஓட்டிகள், காரில் படுகாயத்துடன் இருந்த ஜோதிமணி மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுநர் ஆனந்த் ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.