சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் (Sathya Jyothi Films) 'டி.ஜி. தியாகராஜன்' வழங்கும் 'மரகத நாணயம்' (maragatha naanayam) புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் 'வீரன்' (Veeran). இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (மே 30) நடைபெற்றது.
அப்போது பேசிய சசி, "முதலில் இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து ஆரம்பித்து விடுகிறேன். நான் ஒரு படம் நடித்து வெளியாகிவிட்டது. அடுத்து எப்போது திரையில் என்னை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுது சரவன் சாரினுடைய ஊதவி இயக்குநர் என்னை அவருடைய அலுவலகத்திற்கு கூட்டிக்கொண்டு போய் கதை சொன்னார். 'சக்கரை' எனும் மிகப்பெரிய ஒரு இயக்குநரை எனக்கு கொடுத்துள்ளார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சசி, "தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸூக்கும் எனது நன்றி. பிரசன்னா, ஆதிரா என இவர்களுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. 'உன்னாலே உன்னாலே' (Unnale Unnale) படம் வந்த சமயத்தில் நான் தான்டா வினய் என்று சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். படத்தில் அவருடன் எனக்கு காம்மினேஷன் சீன் எதுவும் இல்லை என தெரிவித்த அவர், அதனால் டப்பிங்கில் வினய் சார் வரும் வரை காத்திருந்து என்னுடை பகுதியை முடித்துவிட்டு சென்றேன்.
கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் இருந்த பல யூடியூபருக்கும் ஆதி அண்ணா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு யூடியூபரை கொண்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயம். படத்தில் எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது.
அதையெல்லாம் பொறுமையாக விளக்கினார். கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவு போலவே உள்ளது. யூடியூபில் எனக்கு ஆதரவு கொடுத்தது போலவே சினிமாவிலும் மக்கள் எனக்கு தொடர்ந்து அன்பை கொடுக்க வேண்டும்" என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் காளி வெங்கட், "'முண்டாசுப்பட்டி' (Mundasupatti) படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்லுகிறேன். இந்த படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஆதி சாரோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி. தமிழில் இது போன்ற முதல் நேட்டிவிட்டி சூப்பர் ஹீரோ (Nativity Superhero) கதையை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்க்கு (Sathya Jyothi Films) நன்றி. இயக்குநர் சரவன் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி" என தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய நடிகர் வினய், "கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு 'சத்யஜோதி தியாகராஜன்' சார் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கிறேன். மிகச் சிறந்த தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். இந்த படத்தின் இயக்குநர் சரவன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டபோது நான் உடனே சம்மதித்து விட்டேன். ஏனென்றால், சூப்பர் ஹீரோ படம் என்றால் அதை எப்படி அவர்கள் நம்பும்படி தர போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களை போல எனக்கும் இருந்தது.
அடுத்தது ஆதி. இனிமையாக பழகக் கூடியவர், நல்ல நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். ஒரு படக்குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது 'வீரன்' (Veeran) படத்தில் உள்ளது. தொழில்நுட்ப குழுவினர் தங்களுடைய சிறந்த பணியை கொடுத்துள்ளனர்" என கூறினார்.
இதையும் படிங்க: வெளியானது எல்.ஜி.எம் செகண்ட் லுக் போஸ்டர்:எதிர்பார்ப்பில் தல தோனியின் ரசிகர்கள்!