ETV Bharat / state

செல்போன் திருடிய இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு! - Youths dead by accident

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த நபரிடம் செல்போனைப் பறித்துவிட்டு தப்பியோடிய இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

செல்போன் திருடிய இளைஞர்கள் சாலை விபத்து உயிரிழப்பு

author img

By

Published : May 9, 2022, 10:50 PM IST

சென்னை: ராஜாஜி சாலை இந்தியன் வங்கி அருகே நேற்று (மே 08) மதியம் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கார்த்திக்கின் செல்போனை பறித்துச்சென்றனர். உடனடியாக செல்போன் கொள்ளையர்களை பிடிக்க கார்த்திக் முயற்சித்தார். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் செல்போன் பறிப்புச்சம்பவம் தொடர்பாக அவர் புகார் அளித்தார். இந்நிலையில் தலைமைச்செயலகம் அருகே உள்ள கொடிமர இல்ல சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 இளைஞர்கள் மின்மாற்றி மீது மோதி 10 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து, போக்குவரத்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருக்கும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் கார்த்திக் என்பவரிடம் செல்போன் பறித்த இளைஞர்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள், விபத்தில் சிக்கிய இளைஞர்களின் தகவல்களுடன் ஒத்துப்போனதால், புகார்தாரர் கார்த்திக்கை அழைத்து வந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் இளைஞர்களை அடையாளம் காண காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல்: கார்த்திக் சொன்ன தகவலின்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இந்த இரண்டு இளைஞர்கள் தான் என காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களில் ஒருவருக்கு முகம் முழுவதும் அழிந்த காரணத்தினாலும், மேலும் மற்றொரு இளைஞர் பற்றிய தகவல் தெரியாததாலும் இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் தவித்துவருகின்றனர்.

மேலும் செல்போன் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் எனத் தெரியவந்துள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகள் உடைந்து உள்ளதால் வாகனத்தை வைத்தும் இறந்த இரண்டு இளைஞர்கள் யார் என்பதனை கண்டுபிடிப்பது சிரமமாக அமைந்துள்ளது. இறந்த இரண்டு இளைஞர்களும் செல்போன் திருடர்கள் என்பதால் காவல் துறையினரிடம் இருக்கும் ’ஃபேஸ் டேக்கர்’ மென்பொருளைக் கொண்டு இறந்தவர்களின் முகத்தை புகைப்படம் எடுத்து பழைய வழக்குகள் உள்ளதா என்று சோதனை செய்துள்ளனர்.

குறிப்பாக ஃபேஸ் டேக்கர் குற்றவாளிகள் முகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் புள்ளிகளாகப் பதிவு செய்து வைத்திருக்கும். அந்த அடிப்படையில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி முகத்தின் ஒரு சில புள்ளிகள் மூலம் இறந்த இளைஞர்களை அடையாளம் கண்டுவிடலாம் என காவல் துறையினர் முயற்சித்தனர். இறந்த மற்றொரு இளைஞர் மீது எந்த வித வழக்கும் இல்லாததால் பேஸ்டேக்கர் மென்பொருளில் இரண்டாவது இளைஞர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

மேலும், செல்போன் பறிப்பு சம்பவங்களுக்கு முன்னதாக பலியான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பதிவான மற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களைப் பற்றிய தகவலை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், விபத்து வழக்குத்தொடர்பாக கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் துறையினரும், செல்போன் பறிப்பு வழக்குத்தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலைய காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.