சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர்கள் அன்புமணி (21) மற்றும் முனியப்பன் (21). நண்பர்களான இருவரும் பைக்கில் நேற்று (டிச.5) இரவு 12 மணியளவில், டிஎம்எஸ் அருகே உள்ள 24 மணிநேரமும் இயங்கக்கூடிய பிரபல பிரியாணி கடைக்குச்சென்றுள்ளனர். பின்னர் பிரியாணி சாப்பிட்ட இருவரும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர்.
அப்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அதிவேகமாக பைக்கில் வந்த இருவரும், நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்ற முனியப்பன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர், உயிரிழந்த முனியப்பனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற அன்புமணி பலத்த காயத்துடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்டர் மீடியனில் மோதிய பைக் - சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழப்பு