ETV Bharat / state

ஆன்லைன் லோன் செயலி மூலம் மிரட்டல் - சூளைமேடு இளைஞர் தற்கொலை - இளைஞர் தற்கொலை

சூளைமேடு அருகே ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞரை மிரட்டி, தற்கொலை செய்யவைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளைமேடு இளைஞர் தற்கொலை
சூளைமேடு இளைஞர் தற்கொலை
author img

By

Published : Jun 20, 2022, 9:00 PM IST

சென்னை: சூளைமேடு திருவள்ளுவர்புரம் தெருவைச்சேர்ந்தவர், பாண்டியன் (30). ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களாகப் பாண்டியனுக்கு பணி இல்லாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ‘Handy loan' மற்றும் 'Rupee loan o cash' ஆகிய ஆன்லைன் லோன் செயலி மூலமாக 15 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து வாங்கிய கடனுக்கு பாண்டியன் சரிவர வட்டி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆன்லைன் கடன் செயலியில் இருந்து பாண்டியனின் செல்போன் எண்ணுக்கு 1500 கடன் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக பணத்தை கட்டவில்லை என்றால், ஆபாசமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பப்படும் என செயலி மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பணம் செலுத்தாமல் பாண்டியன் இருந்ததால், பாண்டியனின் செல்போன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் செல்போன் எண்ணுக்கு பாண்டியன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் எனவும்; வாங்கிய கடனுக்காக பாண்டியனே பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல ஆபாசமாக சித்தரித்து செயலியில் இருந்து குறுந்தகவல் சென்றுள்ளது.

இதனால் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாண்டியனிடம் இது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தாய், தந்தையருடன் பாண்டியனுக்கு பிரச்னை ஏற்பட்டதால், மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் பாண்டியன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இந்நிலையில் இன்று (ஜூன் 20) காலை அதேபோல வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால், பாண்டியன் அறைக்கதவை மூடியுள்ளார். உடனே குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சூளைமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பாண்டியனின் மாமா தனசேகரன் கூறுகையில், "ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தைத் திருப்பி செலுத்தாததால், செயலியில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக பாண்டியன் சென்றார்.

ஆனால், காவல் துறை புகாரை எடுக்கவில்லை. மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டியனின் செல்போனில் இருந்த 350 எண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்லைன் ரம்மிக்காக கடன் வாங்கவில்லை.

கடந்த 4 நாள்களுக்கும் மேலாக ஆபாச மிரட்டல் வருகிறது. நண்பர்களுக்கும் மிரட்டல். இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படத்தை போட்டு மிரட்டினர்” என்றார்.

இறந்து போன பாண்டியனின் தந்தை பேச்சிமுத்து கூறுகையில், "ஆபாசமான மெசேஜ்கள் என்னுடைய மகளுக்கு சென்றுள்ளது. அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று பாண்டியன் மனவேதனையில் இருந்தார்" என்றார்.

பாண்டியனின் மறைவு குறித்து ரத்த சொந்தங்கள் கூறுவது..

தற்கொலை செய்துகொண்ட பாண்டியன் தன்னுடைய செல்போனை விற்று கடனை அடைக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் கடன் செயலி நபர்கள் ஆபாச படங்களை பரப்பிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். சில நாள்களுக்கு முன்பாக, இதேபோல ஆன்லைன் லோன் செயலி மூலமாக சென்னை மாநகராட்சி ஊழியர் பாதிக்கப்பட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவமும் நடைபெற்றது.

மேலும் ஆன்லைன் லோன் செயலிகளிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும்; உடனடியாக லோன் செயலியை செல்போனிலிருந்து நீக்குமாறும் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபாசமான வார்த்தைகளுடன் வெளியான புகைப்படம்

இதையும் படிங்க: Online loan App scams:ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கத் தவிக்கவேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.