ETV Bharat / state

EMI கட்டியும் ஏமாற்றிய வங்கி : போராடி பைக்கை மீட்ட ரியல் லைஃப் "பொல்லாதவன்" - idfc bank EMI

18 மாதங்கள் முறையாக தவணை செலுத்திய நிலையிலும், பைக்கை பறிமுதல் செய்து தனியார் வங்கி விற்ற நிலையில், இளைஞர் ஒருவர் போராடி தனது பைக்கை மீட்டுள்ளார். ரிசர்வ் வங்கி வரையிலும் சென்று அவர் நடத்திய போராட்டத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு.

bike theft case
பைக்கை திருடிய வழக்கு
author img

By

Published : Jun 14, 2023, 10:36 AM IST

சென்னை: சென்னையை அடுத்த பரணிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வளசரவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சிவக்குமார், யமஹா ஷோரூமில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை முன் பணமாக 51, 890 ரூபாய் செலுத்தி வாங்கியுள்ளார். மேலும் மீதமுள்ள பணத்திற்கு ஷோரூம் மூலமாக ஐடிஎஃப்சி வங்கியில் மாத தவணை 6,027 ரூபாய் என மொத்தம் 18 மாதத்திற்கு கட்டும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் சிவக்குமார் 18 மாதங்களாக தவணைக்கான பணத்தை சரியான முறையில் கட்டி முடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிவக்குமார் வளசரவாக்கம் ஏஞ்சலா ஸ்டுடியோ வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்திய போது காணாமல் போயுள்ளது. இருசக்கர வாகனம் காணாமல் போனது தொடர்பாக சிவகுமார் உடனடியாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அதே ஆண்டு டிசம்பர் மாதம் சிவகுமாரின் வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவரது செல்போன் எண்ணிற்கு அபராத செலான் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார் உடனடியாக செலான் அனுப்பிய ஸ்ரீ பெரும்பத்தூர் போக்குவரத்து உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் நாசர் என்பது சிவக்குமாருக்கு தெரியவந்ததையடுத்து, அவரிடம் சென்று விசாரணை நடத்திய போது பார்த்திபன் என்பவரிடமிருந்து ஓஎல்எக்ஸ் மூலமாக வண்டியை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சிவக்குமார், பார்த்திபனை சந்தித்து விசாரித்த போது, வங்கி தரப்பில் ஏலம் விட்ட போது அந்த வண்டியை வாங்கியதாக தெரிவித்துள்ளார். பின்னர் திருடப்பட்ட வண்டிக்கு எப்படி பதிவு சான்று வழங்கப்பட்டது என பூந்தமல்லி வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் சிவக்குமார் மனு கொடுத்து உடனடியாக பதிவு சான்றை ரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட வங்கியில் ஆட்சபேனை இல்லை சான்றிதழ் (NOC) பெறுவதற்காக சிவக்குமார் சென்ற போது சுமார் 3 நாட்களாக சான்றிதழ் வழங்காமல் வங்கி சிவக்குமாரை அலைக்கழித்துள்ளனர். சந்தேகமடைந்த சிவக்குமார் கடந்த 24.12.2021ஆம் தேதி விசாரித்த போது ஐடிஎஃப்சி வங்கி மாத தவணை கட்டியபிறகும் சிவக்குமாரின் வாகனத்தை பறிமுதல் செய்து ஏலம் விட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவரம் அறிந்த சிவக்குமாரை ஐடிஎஃப்சி அதிகாரிகள் இது குறித்து வெளியில் புகார் அளிக்கக்கூடாது என மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன சிவகுமார் உடனடியாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, ஐடிஎஃப்சி வங்கி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததை அடுத்து, சிவகுமாருக்கு நஷ்ட ஈடாக 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் வங்கி நிர்வாகி சதீஷ்குமார் தாம்பரம் பாரத் பல்கலைக்கழகம் அருகே சிவகுமாரை அழைத்து நஷ்ட ஈடு தொகையான 90 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளுமாறு என கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிவகுமாரை ஆபாசமாக பேசி இழிவு படுத்தி உள்ளனர். உடனே சிவக்குமார் வங்கி மற்றும் வங்கி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தற்போது திருட்டு வழக்கை மோசடி வழக்காக மாற்றி ஐடிஎஃப்சி வங்கி மற்றும் மிரட்டிய மேலாளர்கள் சதீஷ்குமார், ராஜசேகர், ராஜமோகன்,பிரகாஷ், சரண்ராஜ் மற்றும் சதீஷ்குமார் மீது மோசடி, மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொல்லாதவன் தனுசை போல கடந்த இரண்டு வருடங்களாக போராடி சிவகுமார் தனது பைக்கை மீட்டுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தின் முக்கிய கஞ்சா வியாபாரிகள் கைது: ஆந்திராவில் அதிரடி காட்டிய மதுரை போலிஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.