ETV Bharat / state

டைம் டிராவலில் சிவனாக நடிக்கும் யோகி பாபு - காத்திருக்கும் 'கொல மாஸ்' சம்பவம்! - The film is being produced by Masala Pix for the 9th time

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் சிவனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

டைம் ட்ராவல் சிவனாக நடிக்கும் யோகி பாபு-காத்துயிருக்கும் கொல மாஸ் சம்பவம்!

author img

By

Published : May 19, 2022, 6:03 PM IST

சென்னை: ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கும் 12ஆவது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார். இவர் இப்பொழுது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை இயக்கி முடித்து, வெளியிடும் வேலைகளில் உள்ளார்.

பெரியாண்டவர் படத்தில் சிவன் வேடம் அணிந்து கதையின்நாயகனாக நடிக்கிறார், யோகிபாபு. இது ஒரு டைம் டிராவல் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம், யோகிபாபு நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா பட வரிசையில் உருவாகவுள்ளது. நாயகியாக முன்னணி நடிகை தேர்வு மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்றுவருகிறது. இதன் படப்பிடிப்பு கோடைகாலம் முடிந்த பிறகு ஆரம்பமாகிறது.

யோகிபாபு, இந்துக்கடவுளான சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் செட் ஒன்று, சென்னை - ஈ.சி.ஆர். ரோட்டில் ரூபாய் 50 லட்சம் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார். சிவன் கதையோடு டைம் டிராவல் கதை என்பதால், சி.ஜி மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிக்காக மும்பையில் பெரிய நிறுவனத்துடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மசாலா பிக்ஸ் நிறுவனம் 9ஆவது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிங்க:சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.