ETV Bharat / state

நீட் தேர்வில் குளறுபடி? -மாணவர்களின் கவனத்திற்கு... - school education

சென்னை: இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வில் இருக்கும் குளறுபடிகளை பள்ளிக்கல்வித்துறையில் தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
author img

By

Published : Apr 27, 2019, 1:48 PM IST

இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தவறுகள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் சரியாக விண்ணப்பத்தினை பதிவு செய்திருந்தாலும் கடந்த 15ஆம் தேதி பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டில் தேசிய தகவல் முகமை பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக்குலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருக்கின்றனர். எனவே நீட்தேர்விற்கான ஹால்டிக்கெட்டில் தங்களது விபரங்கள் சரியாக இல்லாவிட்டால் அதன் நகலினை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை ஸ்கேன் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொழிற்கல்வி இணை இயக்குநர் இமெயிலுக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவ்வாறு, அனுப்பப்படும் தகவல்களை தேசிய தேர்வுகள் முகமையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டு ஹால்டிக்கெட் தவறுகள் சரிசெய்யப்படும். மாணவர்கள் நுழைவுச் சீட்டின் விவரங்கள் சரி செய்யப்பட்டுள்ளதா? என்பதை மறுநாளில் பார்த்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் ஹால்டிக்கெட் தவறா?
மாவட்ட கல்வி அலுவலரிடம் அளிக்கலாம் 

சென்னை, 
 இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் குளப்படி குறித்து பள்ளிக்கல்வித்துறை தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு மே 5 ந் தேதி நடைபெறுகிறது. ஆனால் இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தவறுகள் அதிகளவில் இருந்து வருகிறது. மாணவர்கள் சரியாக விண்ணப்பத்தினை பதிவு செய்திருந்தாலும் கடந்த 15 ந் தேதி முதல் பதிவிறக்கம்  செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டில் தேசிய தகவல் முகமை பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள மாணவர்கள் நீட் தேர்வினை எழுத உள்ளனர்.   நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில்  கடந்த 15 ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. 
ஹால்டிக்கெட்டில் விபரங்கள் சரியாக இல்லாவிட்டால் அதன் நகலினை அந்ததந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை ஸ்கேன் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொழிற்கல்வி இணை இயக்குனர் இமெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதனை தேசிய தேர்வுகள் முகமைக்கு அனுப்பட்டு ஹால்டிக்கெட் தவறுகள் சரி செய்யப்படும். மாணவர்கள் நுழைவு சீட்டின் விவரங்கள் சரி செய்யப்பட்டுள்ளதா? என்பதை மறுநாளில் இருந்து பார்த்து அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.