ETV Bharat / state

நார்கோ சோதனை மூலம் கடினமான வழக்குகளைத் தீர்க்க முடியுமா? விசாரணையில் என்னென்ன சிக்கல்? - அரசு வழக்கறிஞர் விஜயராஜ்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் நார்கோடிக் பரிசோதனை செய்யப்பட்டாலும் தீர்வு எட்டப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு நார்கோ சோதனை செயல்முறைகள் ஏராளமான கட்டுப்பாடுகளுடன் மிகவும் சிக்கலாக இருப்பதே காரணம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

நார்கோ
நார்கோ
author img

By

Published : Dec 21, 2022, 10:33 PM IST

சென்னை: திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சந்தேகத்திற்கிடமான 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புலனாய்வுக்குழுவினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ராமஜெயம்
ராமஜெயம்

அப்போது 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், சண்முகம் என்பவரைத் தவிர அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்குச் சம்மதம் தெரிவித்தனர். பரிசோதனைக்குச் சம்மதம் தெரிவித்த 12 பேர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 11 நபர்களுக்குத் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லெப்ட் செந்தில் என்பவருக்குக் கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உண்மை கண்டறியும் சோதனையை 2 மாதங்களில் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் நார்கோடிக் அனாலிசிஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இந்த சோதனை மூலம் இந்த வழக்கு தீர்க்கப்படுமா? என்பது கேள்விக்குறிதான். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை விரிவாகப் பார்க்கலாம்...

நார்கோடிக் அனாலிசிஸ்:

ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் அற்ற கொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் காவல்துறையின் கடைசி நம்பிக்கையாகவே நார்கோ பரிசோதனை பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனை காவல்துறையினரால் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் நீதிமன்ற அனுமதியுடன், போதைப்பொருள் பகுப்பாய்வில் அனுபவமிக்க மருத்துவர்களின் துணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் கூறுகிறது. ஆனால், கடினமான அனைத்து வழக்குகளிலும் இந்த முறையைப் பின்பற்றி குற்றவாளிகளை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், சோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் சம்மதம் அவசியம்.

நார்கோடிக் பரிசோதனை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், யாருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறதோ? அவரின் சம்மதம் கட்டாயம் பெற வேண்டும். சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்டவருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக நார்கோடிக் சோதனையில் தெரிவித்தாலும், அதை ஆதாரமாகவோ? சாட்சியாகவோ? எடுத்துக் கொள்ளக் கூடாது எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து வழக்குகளிலும், இந்த பரிசோதனையை காவல்துறை கடைப்பிடிப்பது இல்லை.

வழக்கறிஞர்கள் கருத்து:

நார்கோ பரிசோதனை குறித்து அரசு வழக்கறிஞர் விஜயராஜ் கூறும்போது, "நார்கோ பரிசோதனை என்பது ஒருவிதமான மயக்க நிலையில் செய்யப்படும் விசாரணை, இது அறிவியல் பூர்வமான விசாரணையாகச் சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 20பி-யின் படி கட்டாயப்படுத்தி யாரிடமும் சாட்சியம் பெறக் கூடாது. மேலும், பரிசோதனைக்கான போதுமான கருவிகளும், மையங்களும் இந்தியாவில் இல்லை. அதனால் வழக்கில் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது" என்றார்.

வழக்கறிஞர் விஜயராஜ்
வழக்கறிஞர் விஜயராஜ்

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேசும்போது, "நார்கோ பரிசோதனையைத் தனி நபருக்கு எதிராக வழக்கில் தாக்கல் செய்ய முடியாது. முக்கியமான வழக்குகளில் மட்டுமே எடுக்க வேண்டும். நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளில், காவல்துறைக்குச் சிலரின் மீது சந்தேகம் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். யாரிடம் பரிசோதனை செய்ய வேண்டுமோ, அவரின் சம்மதம் மிக முக்கியமானது.

ஒருவருக்கு வழக்கில் தொடர்பு இல்லாத நிலையில் காவல்துறைக்குச் சந்தேகம் இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் பரிசோதனை செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. மேலும், மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அவசியம் இருக்க வேண்டும். இச்சோதனைக்கு உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த சோதனை அடுத்தகட்ட விசாரணைக்கு மட்டுமே உதவும்.

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

கைதிகளையும், குற்றவாளிகளையும் துன்புறுத்தாத நாடுகளில் மட்டுமே இது சாத்தியம், இந்தியாவில் சாத்தியம் இல்லை. சரியான விசாரணை அதிகாரிகளால் மட்டுமே வழக்கை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்ல முடியும். வழக்கில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் அல்லது குற்றவாளியைத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை காவல்துறை நீதிமன்றத்தில் உறுதி செய்த பின் நார்கோ பரிசோதனை செய்யலாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.5.35 கோடி மதிப்புடைய 2.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.