ETV Bharat / state

#whoKilledJayalalitha ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்! - ஜெயலலிதா தோழி சசிகலா

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளான நேற்று #whoKilledJayalalitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

jeyalalitha
jeyalalitha
author img

By

Published : Dec 6, 2020, 6:08 AM IST

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் 2016ஆம் ஆண்டு டிச. 5ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார். அவரது நான்காம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

#whoKilledJayalalitha
#whoKilledJayalalitha

மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்றும் அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விக்கு விடைகாண ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், போயஸ் தோட்டம் வீட்டுப் பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டனர்.

ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இருப்பினும் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் அதற்கான உண்மை இன்னும் வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.

ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளான நேற்று #whoKilledJayalalitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், சிலர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவையும், பாஜகவையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி கேள்வி எழுப்பிவருகின்றனர். அதிமுகவினர் மீது கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.