ETV Bharat / state

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? - கரண் சின்ஹா ஐபிஎஸ்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லி யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. அடுத்த டிஜிபி யார்? என்ற கேள்வி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?
author img

By

Published : Jun 28, 2021, 2:20 PM IST

Updated : Jun 28, 2021, 6:20 PM IST

தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஆக வேண்டும் என்பதே ஐபிஎஸ் அலுவலர்களின் கனவாக இருந்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு டிஜிபியாக இருந்து வந்த ஜே.கே திரிபாதியின் பதவிக் காலம் வருகிற 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

11 பேர் பட்டியல்

இதனால் அடுத்த தமிழ்நாடு டிஜிபி யார் என்ற கேள்வி தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பணி மூப்பு அடிப்படையில் தகுதியான 11 உயர் அலுவலர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளது.

அந்த பட்டியலில் ரயில்வே டிஜிபியாக இருக்கக்கூடிய சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை டிஜிபி கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், லஞ்ச ஒழிப்புதுறை டிஜிபி கந்தசாமி, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், பிரமோத் குமார், ராஜேஷ் தாஸ், பிரஜேஜ் கிஷோர், சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வ நாதன் என 11 அலுவலர்கள் அடங்கிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு ஐபிஎஸ்

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல் துறை டிஜிபி ஆகியோரும் பங்கேற்கின்றனர். 11 அலுவலர்களில் பணி மூப்பில் உள்ள ஐந்து அலுவலர்களின் பெயர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். ஐந்து அலுவலர்களும் பணிக்காலத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா, துறை ரீதியான தண்டனை பெற்றிருக்கிறார்களா என்று ஆய்வு நடத்தப்படும்.

அவர்களில் நால்வர் யார்?

அந்த அடிப்படையில் பாலியல் வழக்கில் சிக்கிய ராஜேஷ் தாஸின் பெயர் நீக்கப்படும். நான்கு அலுவலர்களில் இருந்து ஒரு அலுவலர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில் பணி மூப்பு, எஞ்சியுள்ள பணிக்காலம்,குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத அலுவலர்கள் என்ற அடிப்படையில் சைலேந்திரபாபு, கரண் சிங்கா, கந்தசாமி முதல் மூன்று இடங்களில் உள்ளார்கள்.

சைலேந்திர பாபுக்கு வாய்ப்புகள் அதிகம்?

குறிப்பாக டிஜிபியாக பணியாற்ற வேண்டுமென்றால் மத்திய பணியில் பணியாற்றிருக்க வேண்டும். ஆனால் சைலேந்திரபாபு மத்திய பணியில் இதுவரை பணி ஆற்றாததால் சிக்கல் எழுந்துள்ளது. மத்திய தேர்வாணையக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒரு அலுவலரை தமிழ்நாடு அரசு டிஜிபியாக தேர்வு செய்யும்.

அந்த வகையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

கரண் சின்ஹா ஐபிஎஸ்
கரண் சின்ஹா ஐபிஎஸ்

இது ஒருபுறமிருக்க ஆளுங்கட்சியின் சிபாரிசும், மூப்பு பணியும் சரிவர இருக்கக்கூடிய அலுவலர் சைலேந்திரபாபு தான் அடுத்த டிஜிபியாக வர அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையில் சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழ்நாடு முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழ்நாடு சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களை சைலேந்திர பாபு பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: புதிய டிஜிபி யார்... சின்ஹாவா, சைலேந்திரபாபுவா? - டெல்லியில் இன்று ஆலோசனை

Last Updated : Jun 28, 2021, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.