ETV Bharat / state

பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி - வெளியான திடுக்கிடும் தகவல்! - Chennai news today

சென்னை பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Famous Rowdy: ரவுடி எண்ணூர் தனசேகரன் மத்திய சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி- காரணம் என்ன?

author img

By

Published : Feb 17, 2023, 3:50 PM IST

சென்னை: சென்னை பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. புழல் சிறையில் அடைக்கப்பட்டால் ரவுடிக்குள் கோஷ்டி மோதல் ஏற்படும் என்ற அடிப்படையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை கடலூர் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் கடலூர் சிறைச்சாலையில் துணை ஜெயிலர் மணிகண்டன் திடீரென சிறையில் சோதனை மேற்கொண்ட போது, ரவுடி தனசேகரிடமிருந்து சிறையில் சொகுசாக வாழ்வதற்கு பயன்படுத்திய செல்போன் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பழி வாங்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி துணை ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஜெயிலர் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடலூரில் எண்ணூர் தனசேகரன் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் கடலூர் ஜெயிலில் பணம் கொடுத்து செல்போன் மற்றும் விரும்பிய சாப்பாடு என சொகுசு வாழ்க்கை வாழ பலமுறை முயற்சித்தும், சிறைத்துறையினர் தீவிர கண்காணிப்பு மூலம் அதைத்தடுத்து நிறுத்தினர். பிரபல ரவுடியாக பல கோடி சம்பாதித்து தன்னால் சிறையில் அதிகாரம் செலுத்தி பணம் மூலம் உல்லாசமாக வாழ முடியவில்லை என்று மன உளைச்சலில் அவர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, சிறையில் இருந்து கொண்டே செல்போன் கான்ஃபெரன்ஸ் கால் மூலமாக பல கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு நடத்தி வருவதுதான், ரவுடி எண்ணூர் தனசேகரனின் ஸ்டைல். ஒருபுறம் பணம் பறிக்க வேண்டிய தொழிலதிபர்கள் உள்ளிட்டப் பல்வேறு நபர்களுக்கு செல்போன் மூலம் சிறையிலிருந்து அழைத்து மிரட்டல் விடுவார்.

அதன்பின் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே கான்ஃபெரன்ஸ் கால் போட்டு தன்னுடைய அடியாட்களை ஆயுதங்களுடன் மிரட்டும் நபரின், வீட்டில் நிறுத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து, பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுவதும் பல்வேறு விசாரணைகளில் தெரியவந்தது.

சிறைத்துறை ஜெயிலரின் கடும் கட்டுப்பாடு காரணமாக உல்லாசமாக வாழ முடியாமல், வெளியில் பலர் கொடுத்த கட்டப்பஞ்சாயத்து வேலைகளை சிறையில் இருந்து செல்போன் மூலம் செய்ய முடியாமல் இருந்ததாலும், சென்னையில் தன்னுடைய ஆதிக்கம் குறைந்து கொண்டே வருவதை எண்ணிய தனசேகரன் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டு தவித்து வந்த ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கு, ஒவ்வொரு நாளும் பிபி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தூக்கம் வராமல் இருக்கும்போது தூக்க மாத்திரைகளும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மாத்திரைகளில் 30 பிபி மாத்திரைகளையும், இரண்டு தூக்க மாத்திரைகளையும் சேர்த்து சாப்பிட்டு தான் தற்கொலை முயற்சிக்கு மேற்கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரவுடி எண்ணூர் தனசேகரனை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அதன் பின் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.

உண்மையாகவே மன உளைச்சலில் பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது சிறையில் இருந்து சற்று வெளியில் வருவதற்கு தற்கொலை நாடகமாடினாரா? என்ற கோணத்தில் சிறைத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கு பல்வேறு எதிரிகள் இருப்பதால் ரவுடி கோஷ்டி மோதலில் ஏதேனும் சதி நடைபெறுகிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:பான் கார்டு ரினிவல்செய்வதாக கூறி ரூ.10 லட்சம் அபேஸ்.. பொதுமக்கள் உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.