ETV Bharat / state

விவசாயியாக இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளரான EPS - கடந்து வந்த பாதையும் கண்முன் நிற்கும் சவால்களும்! - eps

அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் பதவியை அலங்கரிக்கத் தகுதிபெற்றிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. அவர் கடந்து வந்த பாதை குறித்தும், இனி அவருக்கு இருக்கக்கூடிய சவால்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது, இந்த கட்டுரை...

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 28, 2023, 7:15 PM IST

சென்னை: பல்வேறு போராட்டங்களை கடந்து ஒற்றைத் தலைமை யுத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளர் என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து எடப்பாடி பழனிசாமிதான் என்ற நிலை உருவாகியுள்ளது.

1974ஆம் ஆண்டு அதிமுகவில் தனது பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மறைவைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு அதிமுகவின் ஜெ அணியில் எடப்பாடியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

1996ஆம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, 1991 முதல் 1996 வரை ஆட்சியில் இருந்த அதிமுக மீது இருந்த அதிருப்தி காரணமாக தோல்வி அடைந்தார். பின்னர் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். 2011ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001, 2006 ஆகிய தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை, தோல்வி காரணமாக துவண்டு இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அதே காலகட்டங்களில் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக 2006ஆம் ஆண்டு கொள்கைப் பரப்பு செயலாளர், 2009ஆம் ஆண்டு அமைப்பு செயலாளர், 2014ஆம் ஆண்டு தலைமை நிலையச் செயலாளர் எனப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2016ஆம் இரண்டாவது முறை அதிமுக ஆட்சி அமைத்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அரசியல் சூழல் காரணமாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றபோது, "யார் இந்த எடப்பாடி பழனிசாமி?, அவரை நான் பார்த்ததே இல்லை" என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக இருந்தது.

ஆனால், பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மத்தியில் 4 ஆண்டுகள் காலம் ஆட்சியை நடத்தி, முதலமைச்சராக பதவியேற்கும் போது யாரென்றே தெரியாத ஒரு நபர், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்தித்தது. அப்போது கூட்டணியுடன் சேர்த்து 75 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தனர்.

விவசாயியாக இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை மற்றும் சவால்கள் என்ன?

அதில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இது 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்ற வெற்றியை விட இது பெரியது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே ஏற்பட்ட உச்சகட்ட மோதலில் ஈபிஎஸ் வென்றதை சாதாரணமாக கடந்து போக முடியாது.

2017ஆம் ஆண்டு தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி தனது அதிரடியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனையும் நீக்கினார். நான்கு ஆண்டுகள் ஆட்சியும் நடத்தி, கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தன்வசப்படுத்தி, தற்போது ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். சசிகலா, டிடிவி தினகரன் நீக்கத்தைத் தொடர்ந்து தற்போது ஓபிஎஸ்ஸையும் நீக்கி வெற்றி கண்டுள்ளார்.

சசிகலாவையும், டிடிவி தினகரனையும் ஓபிஎஸ் ஆதரவு இருந்ததால் எளிதாக அவர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ்ஸை அவ்வளவு எளிதாக நீக்க முடியவில்லை. சட்டப்போராட்டம் பலவற்றை கடந்தே வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழு விவகாரத்தில் இரண்டு தரப்பும் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, இரண்டு நீதிபதி, உச்ச நீதிமன்றம் என மாறி மாறி வழக்கு தொடுத்தனர். அதிமுகவைப் பொறுத்தவரை பொதுக்குழுவிற்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனால், பொதுக்குழு உறுப்பினர்களின் அதிக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்றம் வரை போராடி இரட்டை இலைச் சின்னத்தை பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஒற்றைத் தலைமை என்ற முறையில் அவருக்கு பதவி வந்துள்ளது. சேலம் அருகில் சிலுவம்பாளையம் என்ற சிறு கிராமத்தில் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்ட வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வளர்ந்துள்ளார். சாதாரணத் தொண்டனும் அதிமுகவில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு உதாரணமாக இருக்கிறார்.

பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே உள்ளன. இது போன்ற விஷயங்கள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக இருக்கிறது. அதிமுகவை சர்வாதிகாரப் போக்குடன், ஒரு சமுதாய கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளதாக விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்படுகிறது.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "எடப்பாடி பழனிசாமி பல சட்டப் போராட்டங்களை கடந்து பொதுச்செயலாளராக ஆகியுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தென் மாவட்டங்களில் பரவலாக வாழும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்தல் களத்தில் அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் மத்தியில் ஈபிஎஸ் மீது அதிருப்தி காணப்படும்.

2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது தலைமைக்கான வாக்குகளை நிரூபிக்கும் கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், இனி முழுமையான எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்.

ஆனால், தேசிய அளவில் பாஜகவின் தலைமையை ஏற்றுத்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட முடியும் என்ற சூழல் இருக்கிறது. 2024 தேர்தலை விட 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் எடப்பாடி பழனிசாமியின் இலக்காக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் நீக்கம் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.