திமுக ஆட்சிக்காலத்தில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும் திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முறைகேடு இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமை செயலகத்தில் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சுதர்சனம், “மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படாமலிருக்க வாக்கி டாக்கி திட்டம் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இத்திட்டம், ஆட்சி மாற்றத்தினால் கைவிடப்பட்டது.
மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து அதற்கான டென்டர்கள் பெறப்பட்டதில் பல விதிமீறல்கள் நடைபெற்றன. சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தம் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் சாதாரண கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. மறைந்த முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் கேபிபி.சாமி 2017ஆம் ஆண்டு முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், விஜிலென்ஸ் ஆபீஸர் ஆகியோரிடம் மனு கொடுத்தார்.
ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறுபடியும் தலைமைச் செயலர் சண்முகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது ” என்றார்.
இதையும் படிங்க: 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா