ETV Bharat / state

“இந்தியன் 2 சரியாக ஓடவில்லை என்றால்..” - விஷால் மனுத்தாக்கல்! - நடிகர் விஷால்

Actor Vishal case: லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டும் என நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 7:43 PM IST

சென்னை: நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ், தெலுங்கு திரையரங்கம் மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராதத் தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்சம் ரூபாயை நான் செலுத்தி உள்ளேன். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2" படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். அதனால் தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால், நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதனால் தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு முடியும் வரை RBL வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டுமெனவும் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன்; விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.