சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா புகார் ஒன்றை அளித்தார். அதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் போர்வையில், சில கும்பல் தனியார் வணிக நிறுவனங்கள், உணவகங்களில், உரிமையாளர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற கும்பல்களிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்கவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போலிப் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களும் ஊடகங்கள் தொடர்பான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுத்தால் பத்திரிகையாளர் போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பிடித்து நடவடிக்கை, எடுக்க ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளதாக கூறிய விக்கிரமராஜா, அண்மையில், சரவணா தங்க நகை மாளிகையில் நுழைந்து பணம் பறிக்க முயன்ற 9 பேரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: