மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கும் வரவேற்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று (அக்.29) பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அரசாணைக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இந்தாண்டே மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியான தருணமாக பார்க்கிறோம்.
மேலும், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணை பிறப்பித்த அரசாங்கத்துக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கும் வாழ்த்துகளையும், வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.