Financial crime: சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கௌரி பணியாற்றி வருகிறார்.
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் இஎம்ஆர்சி என்ற துறையில் இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அப்போது கணக்குத் தணிக்கைத் துறை, உரிய விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது நிதி முறைகேட்டில் கௌரி ஈடுபட்டாரா? என்பது குறித்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில் உரிய விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து