ETV Bharat / state

’'சமுதாய நீதி' என்ற புதிய பாடம் அறிமுகம்’ - துணைவேந்தர் கௌரி அறிவிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு 'சமுதாய நீதி' என்ற புதிய பாடம் வரும் கல்வியாண்டு முதல் கொண்டுவரப்படும் என துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் கௌரி பேட்டி
துணைவேந்தர் கௌரி பேட்டி
author img

By

Published : Sep 15, 2021, 7:32 PM IST

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு நேற்று (செப்.14) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் குறிப்பாக புதிய பாடத் திட்டமாக 'சமுதாய நீதி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பி.ஏ சைக்காலஜி மற்றும் சோஷியாலஜி படிப்பவர்களுக்கு சமுதாய நீதி பாடத்திட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தை இளங்கலையில் பிற பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களும் கற்றால் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

எனவே வரும் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இப்பாடம் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படும்.

துணைவேந்தர் கௌரி பேட்டி

மேலும் இந்தப் பாடத்திட்டம் போட்டித் தேர்வு எழுதுவதற்கும் பயனுள்ளதாக அமையும். சமூகத்தில் தற்போது மனிதநேயம் குறைந்துள்ள நிலையில், மாணவர்கள் மனித நேயத்தை கற்றுக் கொள்ளும் வகையில் இந்த பாடத்திட்டம் அமையும்.

இதற்கான பாடத்திட்டம் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கல்விக்குழு வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இந்தப் பாடத்தை மாணவர்கள் விருப்பப்பாடமாக பயிலலாம். இது கட்டாயப் பாடம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.