ETV Bharat / state

கிராமப்புறங்களிலும் இணையதள வசதி அதிகரிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு

author img

By

Published : Feb 14, 2022, 5:01 PM IST

கற்றல் முறையில் டிஜிட்டல் பாகுப்பாட்டை தவிர்ப்பதற்கு, கிராமப்புறங்களிலும் இணையதள வசதிகள் அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களிலும் இணையதள வசதி அதிகரிக்க வேண்டும்

சென்னை: “டிஜிட்டல் முறையில் கற்றலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில் டிஜிட்டல் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும் எனவும், இதனை அடைய இணையதள வசதி கிடைப்பதை ஊரகப்பகுதிகளிலும், தொலைத்தூரப்பகுதிகளிலும் அதிகரிப்பது அவசியமாகும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைய கட்டடத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசும்போது, “சென்னையிலுள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகம் கல்வி வரைபடத்தில் தனித்துவ நிலையைக் கொண்டுள்ளது.

இந்தக் கல்வி நிறுவனம் ஆசிரியர்களுக்கு குறிப்பாக தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிக்க நிறுவப்பட்டதாகும். தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சிக்கான தேசிய முன்முயற்சி கல்வி அமைச்சகத்தின் முக்கிய திட்டமாகும். இதனை சென்னை என்ஐடிடிடிஆர் தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் நிறுவனமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எட்டு வகையான பயிற்சி முறைகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கற்றலுக்காக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அறிவுசார் சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். கற்பவர்களாகவும், அறிவை வளர்ப்பவர்களாகவும் இருக்கும் ஆசிரியர்கள் நமக்குத் தேவை. ஆசிரியர்கள் என்பவர்கள் வாழ்க்கையோடு பிணைந்து மனிதகுலத்தின் நிலைமையை மேம்படுத்த உதவுகின்றனர். சிறந்த ஆசிரியர்கள் கல்விச்சூழலை மறுஉருவாக்கம் செய்கிறார்கள். மேலும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கிறார்கள். தொழில்நுட்ப ஆசிரியர்கள் என்ற முறையில் அதிவேக வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ஊக்கத்தை நீங்கள் தரவேண்டும்.

இந்தச் சூழலில் தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆவணம். இது எதிர்காலத்திற்கான வரைப்படத்தை கொண்டுள்ளது. நமது நாட்டின் கல்விச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த அது வகை செய்கிறது. இளம் கல்விப்புல உறுப்பினர்களை உற்சாகப்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும் முக்கியமானதாக அது கோடிட்டுக் காட்டுகிறது. ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டமைப்புக்குள், கல்விப்புல உறுப்பினர்கள், அவர்களுக்கான துறை மற்றும் பயிற்றுவிக்கும் உத்திகளுக்குத் தேவைப்படும் திறன்களைப் பெறுவதற்கு அப்பால், புதிய கண்டுபிடிப்பையும் அது வலியுறுத்துகிறது.

ஆசிரியர்கள் புதுவகையான உத்திகளைக் கையாள வேண்டும். மேலும் அறிவுபூர்வமான, துடிப்புமிக்க, ஒருங்கிணைந்த சூழலில் தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் அவர்களின் தொலைநோக்குப் பார்வை தீர்வு காண வேண்டும். புதிய கண்டுபிடிப்பு செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். கள அளவில் மாற்றத்திற்கான தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்தக் கல்வி நிறுவனம் பல்வேறு பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது. சிறப்புத் திறன்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துவதில் உறுதிமிக்க ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

மாணவர்களுக்கு அனுபவத்தின் மூலமாகக் கற்பித்தல் முக்கியமானது. அனுபவத்தின் மூலமான கற்றல், படைப்பூக்கத்திற்கும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும் உதவி செய்கிறது. கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்களையும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும் தேவையை தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.

கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடலால் சிறுமிகள், ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள், கிராமப்பகுதிகளில் வாழ்கின்றவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இனச்சிறுபான்மையினர் ஆகியோர் தங்களின் சகாக்களை விட அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

டிஜிட்டல் முறையில் கற்றலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில் டிஜிட்டல் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். இதனை அடைவதற்கு இணையதள வசதி கிடைப்பதை அதிகரிப்பது குறிப்பாக ஊரகப்பகுதிகளிலும், தொலைத்தூரப்பகுதிகளிலும் அதிகரிப்பது அவசியமாகும்.

தேவையான வசதிகளை உருவாக்குவதோடு, மின்னணு கற்றலில் (e-learning) ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். இதில், அவர்களை (ஆசிரியர்களை) உள்ளூர் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் விதமாக தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களாக மேம்படுத்துவதற்கு அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான கட்டாயத் தேவையை பெருந்தொற்று பாதிப்பு உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, கற்பித்தல்-கற்றல் சூழலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் கலப்பு முறையை (ஆன்லைன்-நேரடி கற்பித்தல்) பின்பற்றுகின்றன. கற்போரின் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுவதற்கான தங்களது உத்திகள் மற்றும் நடைமுறைகளில் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: மக்களே உஷார்... ரேசன் அட்டைக்கு ரூ.1000 போலி விண்ணப்பம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.