சென்னை : வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையானது தொடர் கனமழையின் காரணமாக மழை நீர் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பெருங்குடி, தரமணியில் இருந்து மடிப்பாக்கம், தாம்பரம் செல்வோர் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் போக்குவரத்தை துண்டித்து சுரங்கப்பாதையின் முகப்பில் தடுப்புகள் வைத்துள்ளனர். ஆபத்தை உணராமல் தேங்கிய மழைநீரில் சிறுவர்கள் சிலர் நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் உடனடியாக மழைநீரை வெளியேற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே போல் வேளச்சேரி பிரதான சாலயில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது, அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதையும் படிங்க : தொடரும் மழை...கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை