ETV Bharat / state

விபத்தில் சிக்கியவர்களை மீட்க ‘வீரா’ மீட்பு வாகனம் - முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்! - சென்னை விபத்துச் செய்திகள்

VEERA Rescue Vehicle: சென்னை பெருநகர் போக்குவரத்து காவல் துறையில், சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ‘வீரா’ மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

Veera rescue vehicle to rescue accident victims Chief Minister Stalin started the scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 5:21 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா”(VEERA - Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்து, அந்த வாகனத்தையும் மற்றும் காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துக்களில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காப்பதற்கு, ஒரு சிறப்பான முயற்சியாக இந்த மீட்பு வாகனமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இந்தியாவிலேயே முதல்முறையாக திட்டமிடப்பட்டு, சாலை விபத்தில் சிக்கிய அல்லது சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல்துறை குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும். என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலை - முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு!

இந்த வாகனத்திற்கு “வீரா” (VEERA - Vehicle for Extrication in Emergency Rescue and Accidents - அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டம் (Corporate social responsibility) மூலம் உருவாக்கப்ட்டது.

மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன என தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறையினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரையில் புதிய சேமிப்புக் கிடங்குகள் -முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.