ETV Bharat / state

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வானதி சீனிவாசன் கோரிக்கை! - Vanathi Srinivasan

பெண்களுக்கு இறக்கைகளாக மாறியுள்ள இருசக்கர வாகன திட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi-srinivasan-requests-to-re-launch-the-subsidized-scooter-scheme-for-women
மானிய ஸ்கூட்டர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வானதி சீனிவாசன் கோரிக்கை
author img

By

Published : Aug 24, 2021, 3:54 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியக்கருப்பன், "பெண்கள் அனைவருக்கும் பேருந்தில் இலவச பயணத்திட்டத்தை அரசு அறிவித்து நடைமுறையில் இருப்பதால், மானிய விலையில் இருசக்கர வாகன திட்டம் பெண்களுக்கு தேவைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட மானிய விலையிலான ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பு இல்லை" என்றார்.

வானதி சீனிவாசன் கோரிக்கை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், "கடந்த அதிமுக ஆட்சியில் உழைக்கும் மகளிருக்காக மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது மகளிருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாரையும் சாராமல் சுயமாக முடிவு எடுப்பது அவர்களின் பணியை அவர்களே செய்வது என்பதில் முக்கிய அடிப்படையாக இருப்பது சொந்தமாக வாகனங்கள் வைத்துக்கொள்வது.

அத்தகைய வாகனங்களுக்கு மானியத்தை நிறுத்துவது என்பது சரியானதல்ல. பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் இறக்கைகளாக மாறியுள்ளது. எனவே இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்தவேண்டும்" என்றார்.

மானிய ஸ்கூட்டர் திட்டம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற எண்ணும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுக்கு மிகாமல் இருக்க வேண்டும், பயனாளிகள் ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் பழகுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

வாகனம் பெறுவதற்கான மொத்த தொகையில் அரசு மானியமாக 25 ஆயிரம் ரூபாயையும், மாற்றுத்திறனாளியாக இருப்பின் மானியமாக 31 ஆயிரத்து 250 ரூபாயையும் வழங்கிவந்தது.

இதையும் படிங்க: கொங்குநாடு விவகாரத்தில் கட்சியின் கருத்தையே பிரதிபலிக்கிறேன் - வானதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.