ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி.. மத்திய அமைச்சர் கூறியது என்ன? - அலுவல் மொழிச் சட்டப் பிரிவு

MP Ravikumar: சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழி தொடர்பாக எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர், மத்திய அமைச்சரவைக் குழுவின் முடிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை முறைப்படி அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழி சர்ச்சை
சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழி சர்ச்சை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 8:33 AM IST

சென்னை: 09.02.2023 அன்று மாநிலங்களவையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜீஜு, ‘உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 21.05.1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பாக ஒப்புதல் அளிக்கவோ, மறுக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்க அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் எதையும் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மாற்றப்படாவிட்டால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அலுவல்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 348 (1) குறிப்பிடுகிறது.

மேலும், உறுப்பு 348 (2) குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், இந்தி அல்லது வேறு மொழியை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 7, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை மாநில மொழியில் நடத்த அனுமதிக்கிறது.

குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்கள் ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வித திருத்தமும் இல்லாமல், தங்கள் மாநில மொழிகளைத் தங்கள் உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகக் கொண்டு இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், 1965ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் குழுவின் முடிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை முறைப்படி அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல: உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.