கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் சென்னை எழும்பூரில் உள்ள கேபிள் டி.வி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை அகற்றிவிட்டு தனியார் பாக்ஸ்களை இணைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறைந்த விலை கேபிள் கட்டணங்களில் பொதுமக்களுக்கு சேவை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
80 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் இருந்த நிலையில் தற்போது 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள இணைப்புகளையும் தனியார் கேபிள் நிறுவனங்களில் இருந்து மீட்கப்படும்.
கேபிள் தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு அலுவலர்களிடமும் பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு சிறப்பான அரசு கேபிளை நடத்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.