ETV Bharat / state

'தமிழ்ப் பாடத்தில் வகுப்பில் முதல் மாணவன் நான்..தாத்தா தான் காரணம்' - அமைச்சர் உதயநிதி உருக்கம்

பள்ளியில் தமிழில் எப்போதும் 90க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்து, தான் வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு, தனது தாத்தா மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தான் காரணம் என அமைச்சர் உதயநிதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Jan 4, 2023, 4:14 PM IST

சென்னை: தமிழ் வரலாற்றை உலகறிய செய்யும் வகையிலும், மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கும் விதத்திலும், சென்னை இலக்கியத் திருவிழா 2023 தொடங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா இன்று (ஜனவரி 4) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி தாளாளர் விக்ரம் அகர்வால், பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனத் தலைவர் கோ.ஒளிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
இலக்கிய போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'வேறு எந்த மாநிலங்களிலும் இப்படியான இலக்கியத் திருவிழாக்கள் நடக்கிறதா, அதில் கல்லூரி மாணவர்களுக்கு இப்படியான போட்டிகளை, பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு இங்கு நடப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது.

நம் மொழியின் இலக்கிய செழுமையை, அதன் மரபை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். நம் நதி நாகரிக மரபு அடிப்படையில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முதல் நிகழ்வாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’ திருநெல்வேலியில் கடந்த நவம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும், நம் பண்பாட்டையும், அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும்.

தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியை, நம் கலையை, இலக்கியத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு அக்கறையோடும் விடாப்பிடியாகவும் இருக்கிறார் என்பதற்கு இதுபோன்ற பல திட்டங்களை உதாரணங்களாக அடுக்கலாம். அதற்குக் காரணம் அவர் வந்த இயக்கம் அப்படிப்பட்டது. ஏனெனில் திராவிட இயக்கமே எழுதியும், பேசியும் வளர்ந்த இயக்கம் தானே.

பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் எழுதியதையும் பேசியதையும் தொகுத்தாலே நாம் எவ்வளவு போராட்டங்களை கடந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்பது தெரியும். ஏனெனில், இதற்கான வாசக வட்டம், இதை விரும்புபவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனாலும், இது நம் மாணவர்களுக்கு, நம் மண்ணுக்கு அவசியம் என்பதை உணர்ந்து எவ்வளவு நுணுக்கமாக கவனம் செலுத்தி, இதையும் செயலாக்கி வருகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

நான் தீவிரமாக வாசிப்பவன் கிடையாது. ஆனால், சின்னச் சின்ன புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இலக்கியவாதிகளுடன் எனக்கு நல்ல பரிட்சயம் இருக்கிறது. அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். திமுகவில் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் சார்ந்த அமைச்சராகவும் இருப்பதால் நம் வரலாற்றை, கலையை, பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு இதைச் சொல்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் சராசரி மாணவன் தான். ஆனால், தமிழில் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வருவேன். அதற்குக் காரணம் முத்தமிழறிஞர். சிறுவயதில் இருந்தே அவரின் எழுத்துகளையும், முரசொலியையும் படித்து வளர்ந்ததால் இயல்பிலேயே தமிழார்வம் உண்டு.

“என்னிடம் இருந்து செங்கோலைப் பறித்தாலும் எழுதுகோலை எவராலும் பறிக்க முடியாது” என கர்வத்தோடும், தன்னம்பிக்கையோடும் சொன்னவர், கலைஞர். இன்று அவரை நினைவில் வைத்து, அவரின் எண்ணங்களை மனதில் ஏந்தி ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த இலக்கியத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதில் பெரிய ஆச்சர்யமில்லை.

ஒரு காலத்தில் நூலகம் என்றால் நமது கண்முன்னே ஏதோ பழைய கட்டடம் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த நிலையை மாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். சென்னை கோட்டூர்புரத்தில் பேரறிஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, அவர் உருவாக்கிய உலகத்தரத்திலான அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தை அறிவுத் தளத்தில் ஒரு படி உயர்த்தியது.

இன்று, அதேபோல் தென் தமிழகத்தின் அறிவு மாற்றத்திற்காக மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் மிகப்பெரிய நூலகத்தை உருவாக்கி வருகிறார், நம்முடைய முதலமைச்சர். விரைவில் அந்த நூலகமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

நாங்களும் எங்களுடைய இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கியுள்ளோம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த நூலகம் திறந்து இருக்கும். 4 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. ஆர்வமுள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல், நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் ஒரு நடமாடும் நூலகம் அமைக்கும் பணியையும் முன்னெடுத்து வருகிறோம். தமிழகத்தின் பெருமைகளை இளம் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதன் மூலம், நமது மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர்களை ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும். அதுமட்டுமல்ல கலை-இலக்கியம் பெரும் சமூக பார்வையை உண்டாக்கும்.

தனிப்பட்ட வாழ்விலும் கலை-இலக்கியம் உங்களின் தலைமைப் பண்புகளையும் வளர்க்கும். இப்போது நீங்கள் ஏறும் மேடைகள், எதிர்காலத்தில் நிறுவனத்தில் உயர் பதவிகளுக்குச் செல்லும்போது உங்களுடைய தயக்கத்தை எல்லாம் குறைத்து, அந்த இடத்தை உங்களுக்கான இடமாக மாற்ற உதவும். அதை எதிர்காலத்தில் நீங்களே உணர்வீர்கள். ஆகவே, மாணவர்கள், கல்வியோடு இதுபோன்ற திறமைகளையும் உடன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு அண்ணனாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் இலக்கியத் திருவிழாக்கள் தமிழ் மக்களின் கொண்டாட்டத்துக்கு உரிய நிகழ்ச்சியாக கொண்டு செல்லப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படையான கொள்கை. அதை சரியாக செய்துவிட வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் இடைவிடாத எண்ணம். அதைநோக்கித்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, கலந்து கொள்வதும், இந்த நிகழ்வை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதுதான். ஆகவே, மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க: 'காயத்ரி ரகுராம் திமுகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்' - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.