ETV Bharat / state

அரசு வேலை ஆசை - ரூ.2 லட்சம் மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்றத் தலைவர்! - அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்ற தலைவர்!

author img

By

Published : Dec 26, 2022, 11:04 PM IST

சென்னை: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர், சோபனா. இவர் தனது கணவருக்கு அரசாங்க வேலை வாங்க வேண்டும் என தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். அவர் மூலம் அறிமுகமான சென்னை ராமாபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராக உள்ள ராஜசேகர், அரசாங்க வேலையினை தன்னால் வாங்கித் தர முடியும் எனக் கூறி நிதி மற்றும் மனித மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்துள்ளார்.

இதனால் ராஜசேகர் சோபனாவிடம் ’ரூ.50,000 கொடுத்தால் நிச்சயம் வேலை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் ஷோபனா, ராஜசேகர் வங்கி கணக்குக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி உள்ளார். இதையடுத்து ஒன்றரை மாத காலமாக ராஜசேகர் எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து ஷோபனா ராஜசேகரிடம் கேட்டபோது மீண்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுத்தால் விரைவில் வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். மீண்டும் இதனை நம்பி சோபனா ரூ.1.50 லட்சம் பணத்தை ராஜசேகரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் மாநகராட்சி பணியென கூறி ஒரு வேலையில் ஷோபனாவின் கணவரை சேர்த்துள்ளார். அதன் பிறகும் சில வேலைகள் இருப்பதாகக் கூறி சோபனாவிடம் அடிக்கடி ராஜசேகர் பணம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் சோபனாவின் கணவர் பணி புரியும் இடத்தில் தான் 2 லட்சம் கொடுத்து வேலை வாங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட உடன் பணி புரிந்தவர்கள் ’இது நிரந்தர வேலை இல்லை’ என அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சோபனாவிடம் தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த அவர் ராஜசேகரிடம் இது குறித்து கேட்ட போது, ’பணம் கொடுத்த விஷயத்தை ஏன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சொன்னீர்கள்’ எனக் கூறி ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் இருவரும் சேர்ந்து சோபனாவின் கணவரை அடித்துள்ளனர்.

பின்னர் ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் தாங்கள் இருவரும் போலீசின் இன்பார்மர் என்று கூறி நீங்கள் பணிபுரியும் இடத்தில் ’யாருக்காவது கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

இதனால் சோபனாவின் கணவர், ’நாங்கள் ஏன் இதைப் பற்றி எல்லாம் தெரிவிக்க வேண்டுமென’ கேட்டதற்கு, ’கஞ்சா வழக்கில் கணவன், மனைவி இருவரையும் காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்து விடுவோம்’ என ராஜசேகரும் அவரது நண்பரும் மிரட்டி உள்ளனர்.

மேலும் ராஜசேகர் சோபனாவின் வாட்ஸ்அப்பிற்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சோபனா கடந்த வாரம் தற்கொலை முயற்சி செய்து உள்ளார். இதையடுத்து சோபனா ராஜசேகரிடம் ’தங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு; இல்லையென்றால் உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு ராஜசேகர், ’நீ புகார் கொடுத்தால் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தானே புகார் கொடுப்பாய், அந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர் இடம் நான் பேசி விடுவேன்’ என்றும், ’நாங்கள் தான் ஆளும் கட்சி உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது, நீ எங்க போனாலும் நான் பார்த்துக் கொள்வேன்’ எனவும் கூறியுள்ளார்.

இதனால் ராஜசேகர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களிடமிருந்து வாங்கிய 2 லட்சம் ரூபாயை மீட்டுத் தரும்படி, ஷோபனா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்குக'' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.