ETV Bharat / state

பட்டினப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு! - Gas attack

சென்னை: பட்டினப்பாக்கத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 15, 2020, 6:54 PM IST

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), சைன் ஷா(32) ஆகியோர் பல பகுதிகளுக்குச் சென்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றும் (ஜூலை 15) அவர்கள் குபேந்திரன்(53) என்பவர் தனது வீட்டிலுள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்றுள்ளனர். இதையடுத்து நாகராஜூம், சைன் ஷாவும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது திடீரென்று சைன் ஷாவி விஷவாயுவால் தாக்கப்பட்டு, மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரைக் காப்பாற்ற நாகராஜ் முயன்றுபோது அவரும் விஷவாயுவால் தாக்கப்பட்டுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அருகிலிருந்த பொதுமக்கள் மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாவிற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக பட்டினபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...'கரோனா காரணமாக மேலும் 132 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்ககூடும்' - ஐ.நா. எச்சரிக்கை!

For All Latest Updates

TAGGED:

Death
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.