ETV Bharat / state

நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு - உரிமையாளர்கள் கைது - swimming pool child death

முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இன்றி செயல்பட்ட நீச்சல் குளத்தில் 6 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீச்சல் குளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு! உரிமையாளர் இருவர் கைது..

author img

By

Published : Jun 10, 2023, 7:48 AM IST

சென்னை: சென்னையிலுள்ள போரூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தாரிகா என்ற மனைவியும், சஸ்வின் வைபவ் (6) மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், இவர் கூடுவாஞ்சேரி நீலமங்கலத்தில் உள்ள தனது மனைவி தாரிகாவின் அம்மா வீட்டிற்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு கோடை விடுமுறையைக்கா வந்திருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 8) தனது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்பட ஐந்து நபர்கள் அருகிலுள்ள என்எல்எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சஸ்வின் வைபவ், திடீரென பெரியவர்கள் நீச்சல் பழகும் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, தனது இரண்டு வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் அருகே இருந்த தாரிகா இதனைக் கவனிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அரை மணி நேரத்திற்கு மேலாக குளித்துக் கொண்டிருந்த தனது மகன் எங்கே என்று திடீரென காணாமல் தேடியபோது, பெரியவர்கள் நீச்சல் பழகும் நீரில் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த நபர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய நிலையில் இருந்த சிறுவனை தூக்கி வெளியே கொண்டு வந்து, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்‌.

பின்னர், இது குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த மரணம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், நீச்சல் குளத்தின் பாதுகாப்பிற்காக எந்த விதமான பாதுகாவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அப்போது இல்லாத நிலையில் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படாமலும், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் நீச்சல் பழகவும், குளிக்கவும் அமைக்கப்பட்டுள்ள குளங்கள் அருகருகே இருந்ததாலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 304இன் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தனியார் நீச்சல் குளத்தின் உரிமையாளர்களான நாகராஜன் (65) மற்றும் அவரது மகன் பிரபு (38) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நீச்சல் குளம் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில், குன்றத்தூர் தாசில்தார் நாராயண் மற்றும் கிராம அலுவலர் வீரராகவன் தலைமையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Alappuzha Murder: மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை: சிறையில் தற்கொலைக்கு முயற்சி..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.