ETV Bharat / state

சென்னையை உலுக்கிய பெட் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீண்டும் கைவரிசை! - pet bank robbers are back again into robbery

சென்னையில் போலீஸ்போல் நடித்து தனியார் நிறுவன அதிகாரியிடம் 3.50 லட்சம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், விசாரணையில் பெட் வங்கியில் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தெரிய வந்துள்ளது.

சென்னையை உலுக்கிய பெட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீண்டும் கைவரிசை

author img

By

Published : Aug 18, 2023, 3:11 PM IST

சென்னை: சூளை சிகேஎல் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் ராவ் (45). இவர் அண்ணாநகர் ஏ பிளாக் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி எழும்பூர் சென்று பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி என்பவரிடம் 3.50 லட்சம் ரூபாய் கலெக்க்ஷன் பணத்தை பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அண்ணாநகர் 6வது பிரதான சாலை வழியாக வரும்போது அங்கு போலீஸ் என எழுதப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிரபாகர் ராவ்வை வழி மறித்துள்ளனர். மேலும், தாங்கள் போலீஸ் எனக்கூறி, ‘நீ எங்கு சென்று வருகிறாய், உன்னை சோதனை செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த 3.50 லட்சம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்ட அந்த கும்பல் பணத்தை காவல் ஆணையர் அலுவலகம் வந்து வாங்கி செல்லுமாறு கூறிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பிரபாகர், காவல் ஆணையர் அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். அப்போது அதுபோல் யாரும் இல்லை என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகர், இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீஸ்போல் நடித்து தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர். குறிப்பாக, சிசிடிவி காட்சிகள் மூலம் முக அடையாளங்களைக் கண்டுபிடித்து விசாரணை செய்ததில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் போலீஸ்போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையை உலுக்கிய பெட் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய நபர்களாக இவர்கள் செயல்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், மீண்டும் போலீஸ்போல் நடித்து கைவரிசை காட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், வங்கியில் கொள்ளை அடித்து பணக்காரனாக மாறிவிடலாம் என நினைத்த நிலையில், போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும், இதனால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில், தற்போது யாரும் தங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றும், கடந்த இரண்டு மாதமாக வெளியே வந்து பிச்சைக்காரன்போல வாழ்ந்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

அப்போது பிரபாகர் தினந்தோறும் கட்டுக்கட்டாக கலெக்ஷன் பணத்தை எடுத்து செல்வதை நோட்டமிட்டு, பாலாஜியின் திட்டத்தின்படி கொள்ளை அடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதேபோல எத்தனை பேரிடம் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பல் - காய்கறி சந்தையில் இருந்து சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.