இதுதொடர்பாக டிடிவி தினகரன் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "கரோனா பாதிப்பால் நொந்துபோயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல, தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரியை (VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதும் இந்தியாவில் விலை குறைப்பினை மத்திய அரசு செய்யாத நிலையில், அதற்கு நேர்மாறாக இங்குள்ள ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதைத் துளியும் ஏற்கமுடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கெனவே உயர்ந்திருக்கும் சூழலில் பழனிசாமி அரசின் இந்நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களை மேலும் வாட்டி வதைக்கவே வழி வகுக்கும் எனக் கூறியுள்ள தினகரன், பெட்ரோல் - டீசலுக்கான வரியை அதிகப்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!