சென்னை: இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால், காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரை தான் நம்பி இருக்கின்றன
ஏற்கெனவே, திமுக ஆட்சிக் காலங்களில்தான் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாடு தன்னுடைய உரிமையைக் கோட்டைவிட்டு நின்றது. இப்போதும் அப்படி நடந்துவிடக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு மட்டுமல்லாமல் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துள்ள திமுக உடனடியாக செயல்பட்டு, மேகதாது அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாதுப் பகுதியில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு கட்டுமானப் பொருள்களை குவித்து வைத்திருப்பதாக நாளிதழ்களில் அண்மையில் செய்திகள் வெளியானது. இதைக்கண்டு தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து அணைக் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு குழுவை நியமித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று (மே.25) உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை'- டிடிவி தினகரன் ட்வீட்!