சசிகலாவுக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய அரசியல் வரலாறு காணாத வகையில் தியாகத்தலைவிக்கு வாஞ்சைமிகு வரவேற்பளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி. இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கபட்ட நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும், அத்துமீறல்களையும் மிகுந்த பொறுமையோடும் ராணுவக் கட்டுப்பாட்டோடும் எதிர்கொண்டு எனது அன்பு வேண்டுகோளை ஒவ்வோர் இடத்திலும் கழக உடன்பிறப்புகள் செயல்படுத்தி காட்டியதை வரலாறு எப்போதும் மறக்காது.
ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சின்னம்மாவுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்"
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.