ETV Bharat / state

‘நீட் தேர்வில் வெற்றிபெற மாணவர்கள் தயாராக வேண்டும்; தற்கொலை தீர்வல்ல!’

சென்னை: நீட் தேர்வில் வெற்றிபெற மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தற்கொலை தீர்வாகாது என்றும் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunvukarasar
author img

By

Published : Jun 6, 2019, 2:45 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்ததாகவும், இருப்பினும் வேறு வழியின்றி இந்த தேர்வு நடைபெற்றுவருவதால் அதனை எழுத மாணவர்கள் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்கொலை தீர்வாகாது என்றார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்த திருநாவுக்கரசர், அதை வலியுறுத்த தாம் டெல்லி செல்வதாகவும் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையே, முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தி திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பதாகவும், இந்தி மொழியை விருப்பமுள்ளவர்கள் கற்றுத் தேறுவதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள தொண்டர்களின் விருப்போம் ராகுல் காந்தி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது

விரைவில் மகாராஷ்டிரா ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டில் நடக்க உள்ளது தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் வாஜ்பாயை முன்னேறியபோது பாஜக பல தோல்வி அடைந்துள்ளது மாநில கட்சிகளும் தோல்வியடைந்துள்ளன தேசிய மாநில கட்சிகள் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணி செய்து வர வேண்டும் ராகுல் காந்தி வெற்றி தோல்வி பற்றி கவலைபடாமல் கட்சித் தலைமைப் பணியை தொடர்ந்து செயல்பட வேண்டும்

ராகுல் காந்தியை சந்தித்த போது தலைவராக தொடர வேண்டும் என்று சொன்னோம் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களை சந்தித்து ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி செல்கிறேன் என்றார்

நீட் தேர்வு குறித்து திமுக காங்கிரஸ் மீது அதிமுக அதிமுக பாஜக மீது திமுக மாறி மாறி கடந்த 3 ஆண்டுகளாக குற்றம் சொல்லி வருகின்றனர் இந்த முறை நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளன நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்கள் தேர்வு எழுதி தான் ஆக வேண்டும்

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை நீட் தேர்வை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றால் மாணவர்களால் முடியாது மாணவர்கள் எதிர்காலம் என்னாவது ஜெயலலிதா மறைவுக்குப்பின் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று திமுக காங்கிரஸ் உள்பட கட்சிகள் வலியுறுத்தி வருகிறோம்

தேர்வு விலக்கு அளித்தால் நல்லதே மத்திய அரசு கட்டாயமாக தேர்வு நடத்தினால் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அரசு முயற்சி செய்ய வேண்டும்

எந்த தேர்வு எழுதி தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் தற்கொலை செய்வதால் பெற்றோர் குடும்பத்தினர் ஆகியோருக்கு நீங்கதா துயரத்தை ஏற்படுத்துகின்றன தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு எத்தனை தோல்வியாக இருந்தாலும் வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும் தற்கொலை முயற்சியை எடுக்கக் கூடாது

டுவிட்டரில் எதற்காக முதலமைச்சர் பழனிசாமி கருத்தை போட்டார் பின்னரே நீக்கினார் என்பது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது இந்தி திணிப்பதற்கு தமிழகம் எதிராக இருந்ததால் பணிந்து விட்டது இல்லை என்றால் தமிழகத்தில் போராட்டங்கள் ஏற்படும் மூன்றாவது மொழியை விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ள தான் இருக்கிறார்கள் தமிழர்கள் இல்லாத மாநிலமே இல்லை பட்டியலில் உள்ள மொழிகளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் நீதிமன்றங்களில் தமிழ் வாதாடும் மொழியாக அறிவிக்க வேண்டும்

நீட் தேர்வவிற்க்கு திமுக காங்கிரஸ் உள்பட எதிராக தான் உள்ளோம் பாராளுமன்றத்தில் நீட்டிற்க்கு எதிராக குரல் கொடுப்போம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.