பொதுவாக போக்குவரத்து காவலர்கள் என்றாலே கடுமையாக நடந்து கொள்வார்கள் என்ற எண்ணம் மக்களிடையே இருந்துவருகிறது. இதனால் சாலையில் செல்லும் போது போக்குவரத்து காவலரை கண்டாலே ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலையில் உள்ளனர். ஆனால், சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்று திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளது. மேலும் கிழே விழுந்ததில் காயமடைந்த அந்த பருந்தினால், மீண்டும் பறக்க இயலாமல் தத்தளித்தது.
இதைக் கண்ட போக்குவரது காவலர் ஒருவர், அந்த பருந்தை பத்திரமாக மீட்டு, முதலுதவி அளித்தார். மேலும் பருந்துக்கு உணவளித்து, அதை வேளச்சேரியிலுள்ள ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தார்.
பறக்க முடியாமல் தவித்த பருந்துக்கு முதலுதவி அளித்த போக்குவரத்து காவலரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:மின்வாரிய ஊழியரின் வாகனம் பறிமுதல்: காவல் நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்து பழிவாங்கிய ஊழியர்கள்!