ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 7 AM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2021, 7:08 AM IST

1. புனே-சென்னை வந்தடைந்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள்

புனேவில் இருந்து எட்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

2. சரக்கு வேணுமா அப்போ தடுப்பூசி போடு! - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

3. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட 18 அறிவிப்புகள்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்ட புதிய 18 அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

4. கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கரோனா!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

5. ஓபிஎஸ் மனைவியின் உடல் தகனம்: ஓ.பி. ரவீந்திரநாத் எரியூட்டினார்

மாரடைப்பால் காலமான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் மனைவி விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எரியூட்டினர்.

6. மீனவ குடும்பங்கள் ஒதுக்கிவைப்பு: மாவட்ட ஆட்சியர் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

சீர்காழி அருகே மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கைத் தாக்கல்செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

7. தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தை இணைக்க எதிர்ப்பு

தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தாம்பரத்துடன் பல்லாவரத்தை இணைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

8. குடிபோதையில் பிரபல சூழலியல் செயற்பாட்டாளரை தாக்கிய கும்பல்: போலீஸ் விசாரணை

கர்நாடகா மாநிலத்தில் சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷ், போதை கும்பலால் கடுமையாகத் தாக்கப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

9. பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது நடவடிக்கை!

பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ செயல்படும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

10. தீர்ந்தது சிக்கல்; திட்டமிட்டபடி வருகிறார் தலைவி!

கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.