1. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ராமநாதபுரம் முதலிடத்தில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
2. பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், அவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
3. சென்னையின் அடையாளமாக பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகம் இருக்கும்!
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட இருக்கும் மிகப்பெரிய வணிக வளாகம் சென்னையின் அடையாளமாக இருக்கும் என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
4. பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன், அனிதா நினைவேந்தல் - சீமான் சூளுரை
பூலித்தேவனின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசனின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த அனிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான நேற்று (செப். 1) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
5. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க யோசனை!
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம் என ஒன்றிய- மாநில அரசுகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
6. தினசரி சந்தைக்கு சீல் - மனித நேய மக்கள் கட்சி போராட்டம்
உதகை தினசரி சந்தையில் சீல் வைக்கபட்டுள்ள கடைகளை திறக்க கோரியும், குழு அமைத்து வாடகை பாக்கி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர், வியாபாரிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
7. ஓடும் ரயிலில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்!
சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே இரு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த 'படா' கம்பெனி
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் 'வெர்வ் லாஜிக்' என்ற நிறுவனம் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும், 'மணி ஹீஸ்ட்' வெப் சீரிஸைப் பார்க்க தங்களது ஊழியர்களுக்கு மொத்தமாக விடுமுறை அறிவித்துள்ளது
9. செப். 30ஆம் தேதி பாண்ட் ரசிகர்களுக்கானது!
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி சீரிஸ் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
10. கோலியை முந்தினார் ரோஹித்; மீண்டு(ம்) வருவாரா ஃபேப் ஃபோரில்?
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 5ஆவது இடத்தையும், விராட் கோலி 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.