ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top 10 news etv bharat tamil
top 10 news etv bharat tamil
author img

By

Published : Jun 21, 2020, 11:13 AM IST

கல்வான் பள்ளதாக்கு: உரிமை கோரும் சீனா, நிராகரித்த இந்தியா

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தை வரலாற்று ரீதியில் பார்க்க வேண்டும். அதனை சீனா உரிமை கோருவதை எவ்விதத்திலும் அனுமதிக்கமாட்டோம் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

வருவாய் அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை - சிக்கியது கடிதம்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள வருவாய் அலுவலகம் முன்பாக விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரிடமிருந்து கிடைத்த கடிதத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடினமான யோகா செய்து அசத்திவரும் முதியவர்!

ஜெய்ப்பூர்: பிச்சராய் தால் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் கடினமான யோகா செய்து பலரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறார்.

வீட்டிலேயே யோகா செய்யுங்கள்: ஆளுநர் வேண்டுகோள்!

சென்னை: சர்வதேச யோகா தினமான இன்று வீட்டிலேயே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'ராகுல் காந்தி பாதுகாப்புப் படையின் தரத்தைத் தாழ்த்திப் பேசுகிறார்' - ஜே.பி. நட்டா

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி பிரதமரைக் கேள்விகேட்பதாக நினைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையின் தரத்தைத் தாழ்த்திப் பேசுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவள்ளூர்

திருவள்ளூர்: முழு ஊரடங்கின் காரணமாக மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

'சீன பொருள்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும்' - முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
போப்பால்: இந்தியர்கள் சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் புறக்கணித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை உடைக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

இன்றைய வலி நாளைய வலிமை!
பொறியாளன், பியார் பிரேமா காதல் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயர் எடுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்த ஹரீஷ் கல்யாண் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைக்க முயன்றுவருகிறார். தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது.

காசிக்கு கரோனா பரிசோதனை!
குமரி: பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில், கைது செய்யப்பட்ட காசி, அவரது கூட்டாளிக்கு ஐந்து நாள்கள் சிபிசிஐடி காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று (ஜூன் 20) நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். அப்போது நீதிபதி உத்தரவுப்படி காசிக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது.

அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா - சீனா இடையே சுமுகத் தீர்வு: நேபாளம் நம்பிக்கை

காத்மாண்டு: இந்தியா - சீனா இடையிலான சமீபத்திய எல்லை மோதல்கள் அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நேபாளம் விரும்புகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.