1. பணம், பொருள்கள் பறிமுதல்; முதலிடத்தில் தமிழ்நாடு - தேர்தல் ஆணையம்...!
தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புகள் அனைத்தையும் மீறி, கடந்த எந்தத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், தமிழ்நாட்டில் அதிகளவு பணம், பரிசுப் பொருள்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், கடந்த தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மொத்த அளவைவிட 4.20 மடங்கு அதிகமாகும்.
2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: நேரில் ஆஜராக சிதம்பரத்துக்கு விலக்கு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அவரது மகன் ஆகியோருக்கு விலக்கு அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. 'நான் தனிமனிதத் தாக்குதலை நடத்தவில்லை' - உதயநிதி
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தனிமனிதத் தாக்குதலை நடத்தவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தன் மீதான குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ளார்.
4. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வழக்கில் முக்கிய பங்கு காவலர் முருகனுக்கு உள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
5. தேர்தல் நாளன்று சென்னையில் 10 வழக்குகள் பதிவு
சென்னையில் தேர்தல் நாளன்று விதிமுறைகளை மீறியதாக பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
6. இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்- சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரத்தில் ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது.
7. கதாநாயகனாக மாறிய காமெடியன் சதீஷ்!
சென்னை: நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார்.
8. சுல்தான் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கார்த்தி
சென்னை: சுல்தான் படம் வெற்றி அடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
9. IPL 2021 : மீண்டெழுமா தோனியின் அதிரடிப்படை?
சென்னை அணியின் முப்பெரும் தூண்களாக கருதப்படும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பின் விளையாடுவது சிஎஸ்கேவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம்.
10. விராட் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.