ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 27, 2020, 12:56 PM IST

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

சாத்தான்குளம் விவகாரம்: ஆடியோ வெளியீடு!

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகளை காவல் நிலையத்தில் நள்ளிரவில் அடிக்கச் சொல்லி ஆய்வாளர் வற்புறுத்தினாரா? என்பது குறித்து காவலர் இருவர் உரையாடிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ்நாட்டில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!

சென்னை: கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

‘கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’- வலுக்கும் கோரிக்கைகள்

சென்னை: தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களின் பருவத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு உயர் கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

போலி இ-பாஸ்: அரசு அலுவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

சென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள அரசு அலுவலர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ. 620 கோடி ஒதுக்கீடு

டெல்லி: கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை விரைவில் அதிகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

'காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறப்போகிறேன்'- இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறி, அம்மக்களின் பிரச்னைகள் குறித்து வெளி உலகுக்கு தெரிவிப்பேன் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூளுரைத்துள்ளார்.

'உலகம் இருமுனை தாக்குதலை எதிர்கொள்கிறது' - ஜெய்சங்கர்

டெல்லி: ஒருபுறம் தொற்றுநோய், மறுபுறம் வைரலாகும் தவறான தகவல் என உலகம் இருமுனை தாக்குதலை எதிர்கொள்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நாட்டில் ஒரேநாளில் 18,552 பேருக்கு கரோனா!

ஹைதராபாத்: நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.

'காவல் துறை கொலைசெய்தால் யாரை அழைப்பது?' - நீதி கேட்கும் யுவன்

சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்கும்விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வான் தாக்குதலில் வீரமரணம்: ஒரே வாரத்தில் காப்பீட்டு தொகை வழங்கிய எஸ்.பி.ஐ!

ராம்கார்க் (ஜார்க்கண்ட்): கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு செல்லவேண்டிய காப்பீட்டு தொகையை எஸ்.பி.ஐ., வங்கி ஒரே வாரத்தில் வழங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.