சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!
கரோனா தொற்றுக்கு சென்னையில் இன்று மட்டும் இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பரவல், சாத்தான்குளம் விவகாரம்: டிஜிபி சுற்றறிக்கை!
சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு, சாத்தான்குளம் தந்தை-மகன் சந்தேக மரணம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக அனைத்து காவலர்களுக்கும் காவல் துறைத் தலைவர் திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சரக்குகளுக்குக் கடும் கட்டுப்பாடு!
சென்னை விமான நிலைய சரக்ககத்திற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சரக்குகளுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் - ராகுல் அறிவிப்பு
டெல்லி: கோவிட் -19 தொற்றுநோய், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் வரும் ஜூன் 29ஆம் தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என புதன்கிழமை (ஜூன் 24) காங்கிரஸ் மாநிலத் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது காஷ்மீர் காவல் துறையினரால் இரண்டு பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தது ஏன்?
ஹைதராபாத்: எமர்ஜென்சியின் 45ஆவது ஆண்டு தினமான இன்று, இந்திய ஜனநாயகத்தின் 'இருண்ட பக்கமான' அவசர நிலை, ஏன், எப்படி, எவ்வாறு நடந்தது? அதன் பின்னர் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது ஈடிவி பாரத்தின் இந்தக் கட்டுரை!
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு தூதர்களாகும் பிரியங்கா, அனுராக் கஷ்யாப்
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவும், இயக்குநர் அனுராக் கஷ்யாப்பும் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் இந்தத் திரைப்பட விழாவுக்குத் தூதர்களாகவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
'ஒபாமா கேர்' மசோதா மீது விரைவில் வாக்கெடுப்பு!
வாஷிங்டன்: புகழ்பெற்ற 'ஒபாமா கேர்' சட்டத்தை விரிவுபடுத்தும் மசோதா மீதான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
இந்திய- சீன எல்லையில் சிக்கிம் படை: காரணம் என்ன?
காங்டாக்: இந்தியா - சீனா இடையேயான பதற்றம் காரணமாக பாதுகாப்பிற்காக எல்லையில் சிக்கிம் காவல் படை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்: கால அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: வருமான வரியைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார்-பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இணைப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.