1.முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சராக பதவியேற்ற முக. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, கரோன நிவாரண நிதித் தொகையாக ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார்.
2.கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதலமைச்சர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
3.இனித் தமிழகம் வெல்லும் - ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம்!
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின், மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு முதலமைச்சர்" என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
4.நான் திராவிடன் - அண்ணா வழியில் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரங்களை மாற்றியுள்ளார்.
5. மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரமதர் மோடி வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6.இந்திய அளவில் ட்ரெண்டான #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து, இந்திய அளவில் #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது
7.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்!
முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல், ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பாமக செயல்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
8. நான்கு மணி நேரத்தில் மதுக்கடைகளில் 81 கோடி ரூபாய் வசூல்!
தமிழ்நாட்டில் நான்கு மணி நேரத்தில் மதுக்கடைகளில் 81 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
9.கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி!
சென்னை: கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
10. ’தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ - சூர்யா
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சூர்யா ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.